மார்த்தாண்டம், செப்.1: மேக்காமண்டபம் ஈத்தவிளை பகுதியை சேர்ந்தவர் சுனில் (36). இவர் கடந்த 29-ம் தேதி தனக்கு சொந்தமான இருச்சக்கர வாகனத்தை மார்த்தாண்டம் மிஷன் மருத்துவமனை எதிரில் உள்ள பாலத்தின் அடியில் நிறுத்தி விட்டு பொருட்கள் வாங்க கடைக்கு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது மர்ம ஆசாமி இருசக்கர வாகனத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சுனில் கொடுத்த புகாரின்பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.
+
Advertisement