மானூர்,நவ.12: மானூர் அருகே பள்ளமடை குளத்தில் அனுமதியின்றி மீன்பிடித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். மானூர் அருகேயுள்ள பள்ளமடை கிராமத்தில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் குளம் ஒன்று இருந்து வருகிறது. இந்நிலையில் இக்குளத்திற்கு சம்பவத்தன்று வந்த சிலர் அனுமதியின்றி மீன் பிடித்துள்ளனர். பின்னர் இதுகுறித்து தெரியவந்ததும் நீர்வளத்துறை அதிகாரி விஸ்வநாதன் மானூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிவுசெய்த போலீசார், பள்ளமடையை சேர்ந்த ஒளிமுத்து (40), திருவாளி (38), துரைப்பாண்டி (42), சிவன் (45) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
+
Advertisement