சேலம், மே 19: சேலம் மாவட்டம் சங்ககிரி அடுத்த கதிரிசாமியாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கலாமணி (38). இவரது 15 வயது மகன் அங்குள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினான். தேர்வு முடிவில், அறிவியல் பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை. இதனால் மனக்குழப்பத்தில் இருந்து வந்துள்ளார். மாணவனின் வீட்டுக்கு பள்ளி ஆசிரியர் வந்து மறுதேர்வுக்கு விண்ணப்பிக்க வருமாறு அழைத்துள்ளார். இந்நிலையில் கடந்த 15ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற மாணவன் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து கலாமணி தேவூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான மாணவரை தேடி வருகின்றனர்.
+
Advertisement