சேலம், ஜூலை 9: சேலம் வின்சென்டில் செயல்பட்டு வரும் அரசு கலைக்கல்லூரியில் மாணவர்களுக்கான திறன் வளர்ப்பு கருத்தரங்கம் நேற்று நடந்தது. கல்லூரி முதல்வர் செண்பகலெட்சுமி தலைமை வகித்தார். தமிழ்த்துறை தலைவர் பிரேமலதா முன்னிலை வகித்தார். பேராசிரியர் ஜோதி வரவேற்றார். இதில், முன்னாள் மாவட்ட கல்வி அலுவலர் உதயக்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது, ‘‘சாதாரணமானவர்களிடம் இருந்த தன்னம்பிக்கை தான், அவர்களை சாதனையாளர்களாக மாற்றியுள்ளது. மாணவர்களுக்குள் உள்ள திறமைகள், தற்போது பொழுதுபோக்காக மாறி வருவது வேதனை அளிக்கிறது. திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்பு அனைவருக்கும் உள்ளது. அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டு, சாதனையாளர்களாக வர வேண்டும்,’’ என்று அறிவுறுத்தினார். பின்னர், மாணவர்களின் கேள்விகளுக்கு, பதிலளித்து பேசினார். முடிவில் பேராசிரியர் கந்தசாமி நன்றி தெரிவித்தார்.
+
Advertisement


