Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மழையால் பாதித்த இடங்களில் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு: மீட்பு பணிகளை விரைவுப்படுத்த நடவடிக்கை

திருவண்ணாமலை, டிச.3: திருவண்ணாமலையில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களில், அமைச்சர் எ.வ.வேலு நேரடி ஆய்வு செய்து, நிவாரண பணிகளை விரைவுபடுத்த நடவடிக்கை மேற்கொண்டார். திருவண்ணாமலையில் வரலாறு காணாத அளவில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்தது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் மழை நீடித்தது. திருவண்ணாமலையில் கொட்டி தீர்த்த கன மழையால், நொச்சி மலை ஏரி, வேங்கிக்கால் ஏரி, சமுத்திரம் ஏரி உள்ளிட்ட பெரும்பாலான ஏரிகள் முழு கொள்வது எப்படி திறந்து விடப்பட்டுள்ளது. அதனால், ஏரிகளை ஒட்டி உள்ள சாலைகளில் வெள்ளப்பெருக்கும், அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் வெள்ளம் சூழ்ந்தும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், திருவண்ணாமலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு செய்தார். மழையால் பாதித்த பகுதிகளில் உடனடியாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும், மழை வெள்ளம் வடிந்து செல்வதற்கான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.

அதன்படி, ஜேசிபி பொக்லைன் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு, போர்க்கால அடிப்படையில் பணிகள் நடந்தன. சாலைகளில் தேங்கிய மழை வெள்ளம் உடனடியாக வெளியேற்றப்பட்டன. மேலும், வெளி மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் 300க்கும் மேற்பட்டோர் திருவண்ணாமலை நகரின் சாலை சீரமைப்பு பணிகளில் இரவு பகலாக ஈடுபட்டனர். அந்தப் பணிகளை அமைச்சர் ஆய்வு செய்தார்.  மேலும், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கினார். ஆய்வின்போது, கலெக்டர் பாஸ்கர பாண்டியன், திருவண்ணாமலை மாவட்டத்துக்கான கண்காணிப்பு அலுவலர் தீபம் ஜேக்கப், எம்பி சி என் அண்ணாதுரை, மாநில தடைகளை சங்க துணை தலைவர் எ.வ.வே.கம்பன், எம்எல்ஏ மு.பெ.கிரி, மேயர் நிர்மலாவேல் மாறன் முன்னாள் நகராட்சி தலைவர் ஸ்ரீதரன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.