கோவை, ஜூலை 25: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக மருதமலை, சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ரூ.87 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் திருக்கோயிலில் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் பக்தர்களின் அடிப்படை வசதியான குளியலறை மற்றும் கழிவறைகள் ஆகியவற்றை நேற்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கோவை மண்டல இணை ஆணையர் ரமேஷ், அறங்காவலர் குழு தலைவர் ஜெயகுமார், துணை ஆணையர், செயல் அலுவலர் செந்தில்குமார், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மகேஷ்குமார், பிரேம்குமார், கனகராஜன், சுகன்யாராசரத்தினம் மற்றும் உள்ளுர் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
+
Advertisement


