Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மயிலாடுதுறை மாவட்டத்தில் திருநங்கைகள் வாழ்வாதாரம் மேம்பட நடவடிக்கை நாகப்பட்டினம் மாவட்டத்தில் சமூக சேவகர் விருது பெற விண்ணப்பிக்கலாம்

நாகப்பட்டினம்,மே31: நாகப்பட்டினம் மாவட்டத்தில் சமூக சேவை புரிந்த சமூக சேவகர் இருபாலர்களும் விருதுகள் பெற வரும் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

முதல்வரால் வரும் 15ம் தேதி சென்னையில் நடைபெற உள்ள சுதந்திர தினவிழாவில் சிறந்த முறையில் சமூக சேவை புரிந்த சமூக சேவகர் இருபாலர்களுக்கும், மற்றும் சமூக சேவை புரிந்த தொண்டு நிறுவனங்களுக்கும் விருதுகள் வழங்கப்பட உள்ளது. இந்த விருது பெறுவதற்கு தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டும், 18-வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலரும், குறைந்த பட்சம் ஐந்தாண்டுகள் சமூகநலன் சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணியாற்றியவராகவும் இரக்க வேண்டும்.

சமூக சேவை நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகவும், பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பாக சேவை புரிந்திருக்க வேண்டும். இந்த விருதை பெற நாகப்பட்டினம் மாவட்டத்தில் தகுதியான தொண்டு நிறுவனம் மற்றும் சமூக சேவை புரிந்த ஆண், பெண் இருபாலர்கள் (https://awards.tn.gov.in) இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மாவட்ட சமூகநல அலுவலகத்தை நேரில் தொடர்புக்கொண்டு அதற்கான விண்ணப்பப்படிவத்தினை பெற்று தேவையான ஆவணங்கள் மற்றும் புகைப்படத்துடன், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தனித்தனியாக பூர்த்தி செய்து மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், நாகப்பட்டினம், என்ற முகவரிக்கு வரும் 10ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.