Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மனைவியை துன்புறுத்திய போலீஸ் மீது வழக்கு

காங்கயம், பிப்.11: மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவை சேர்ந்தவர் பாண்டீஸ்வரன் (33). கடந்த 2016ம் இரண்டாம் நிலை காவலராக தேர்வு செய்யப்பட்டார். இவருக்கும், மதுரை மாவட்டம் மேலளவை காந்திநகர், ஜெகஜோதி (25) என்பவருக்கும் கடந்த 30.03.2018ல் திருமணம் நடந்தது.

பாண்டீஸ்வரன் குடும்பத்துடன் காங்கயம் உடையார் காலனியில் குடியிருந்து கொண்டு தற்போது காங்கயம் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த 6 மாதங்களாகவே கணவன், மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சனை இருந்ததாக தெரிகிறது. இதில் கணவன் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதாகவும், ஜெகஜோதி விசாரித்துள்ளார். அதில் உறவு பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இது குறித்து கேள்வி கேட்ட ஜெகஜோதியை பாண்டீஸ்வரன் தாக்கி உள்ளார்.

ஜெகஜோதியிடம், பாண்டீஸ்வரன் நீ உன் அம்மா வீட்டிற்கு சென்றுவிடு என அடிக்கடி சண்டையிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கணவர் அடித்து துன்புறுத்துவதாகவும், தனக்கு தெரியாமல், வேறு ஒரு பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு தன்னை கொடுமைப்படுத்துவதாகவும் காங்கயம் மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், விசாரணை நடத்திய போலீசார் பாண்டீஸ்வரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.