பாப்பிரெட்டிப்பட்டி, ஜூன் 13: பாப்பிரெட்டிப்பட்டி அருகே பழைய கொக்கராப்பட்டியை சேர்ந்தவர் தமிழ்செல்வன்(37). இவரது மனைவி கலையரசி(32). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். தமிழ்செல்வனுக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் தினசரி குடித்து விட்டு, கலையரசியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் கோபித்து கொண்டு, அதே பகுதியில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு கலையரசி சென்று விட்டார். இந்நிலையில், கடந்த 10ம் தேதி தமிழ்செல்வன் ரோட்டில் நடந்த சென்ற கலையரசியை, தகாத வார்தையால் திட்டி, கை மற்றும் கட்டையால் அடித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு, அரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இது குறித்து தகவல் அறிந்த கோபிநாதம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தமிழ்செல்வனை கைது செய்து, அரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அரூர் கிளை சிறையில் அடைத்தனர்.
+
Advertisement