ஈரோடு, ஆக. 10: பவானி அடுத்துள்ள எம்மாம்பாளையம், கிழவன்காடு தோட்டத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (79). இவருக்கு கடந்த 2 மாதங்களாக மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்தார். இந்நிலையில், கடந்த 29ம் தேதி வீட்டில் இருந்த அனைவரும் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில், மாரிமுத்து மட்டும் வீட்டில் இருந்தார். பின்னர், மதியம் மகன் அங்கமுத்து வீட்டிற்கு சென்ற போது தந்தை காணாமல் போனது தெரியவந்தது. இதையடுத்து, பல்வேறு இடங்களில் தேடியும் எவ்வித தகவலும் கிடைக்காததால் பவானி போலீசில் இது குறித்து புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement