புதுச்சேரி, ஏப். 22: புதுச்சேரி உருளையன்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சி.வி. சாலை சந்திப்பு அருகே நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் ஒருவர், அவ்வழியாக செல்லும் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற உருளையன்பேட்டை போலீசார் மர்ம நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் பாகூரை சேர்ந்த தர்மசீலன் (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குபதிந்து கைது செய்தனர்.
+
Advertisement


