ஊத்தங்கரை, அக்.29: கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் எஸ்ஐ நித்யா மற்றும் போலீசார், பாவக்கல் பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, அந்த பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த நபரை சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில், அவர் அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி ரவிச்சந்திரன் (44) என்பது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement


