Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மதுக்கூர் வட்டாரத்தில் உலக மண்வள தினம்

பட்டுக்கோட்டை, டிச. 8: பட்டுக்கோட்டை அடுத்த மதுக்கூர் வட்டாரம், மதுரபாஷானியபுரம் கிராமத்தில் மண் வளதினம் நிகழ்ச்சி நடந்து. தஞ்சை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் அறிவுரைப்படி தஞ்சை மாவட்ட வேளாண் துணை இயக்குனர் சுஜாதா தலைமையில் உலக மண்வள தினம் கொண்டாடப்பட்டது. கூட்டத்தில் மண் வளத்தின் முக்கியத்துவம், மண்ணில் உள்ள சத்துக்களை எவ்வாறு அளவீடு செய்தல், அளவீடுகளின் அடிப்படையில் மண்ணைக் கண்காணித்தல் மற்றும் மண்ணை பராமரித்தல் ஆகிய தலைப்புகளின் கீழ் வேளாண் துணை இயக்குனர் சுஜாதா பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், மண்ணில் உள்ள தழை, மணி, சாம்பல் சத்துகள் மற்றும் நுண்ணூட்ட சத்துக்களை அளவீடு செய்வதன் முக்கியத்துவம், அதனடிப்படையில் மண்ணின் வளத்தினை எவ்வாறு பயிர் சார்ந்து கண்காணிப்பது மற்றும் மண்ணின் வளத்தினை குறைக்காமல் அதனை எப்படி பராமரிப்பது? என்பது குறித்து விவசாயிகளிடம் விளக்கிக் கூறினார். அட்மா திட்ட அலுவலர்கள் சுகிர்தா மற்றும் ராஜு விவசாயிகள் தங்கள் வயல்களில் மண்ணின் வளத்தினை அளவீடு செய்வதற்கு மண் மாதிரி எடுக்கும் முறைகள் மற்றும் பல்வேறு பயிர்களுக்கு எவ்வளவு ஆழத்தில் மண் மாதிரி எடுக்க வேண்டும் போன்றவைகள் குறித்து செயல்விளக்கமாக செய்து காட்டினர்.

மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி, மண்வள அட்டையின் பயன்பாடு அதன் முக்கியத்துவம் பற்றி எடுத்துக் கூறி வேளாண் துணை இயக்குனர் மற்றும் மதுரபாஷானியபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் மூலம் மண்வள அட்டைகளை வழங்கினார். உதவி விதை அலுவலர் இளங்கோ கூட்டத்தினை ஒருங்கிணைத்தார். முடிவில் மதுக்கூர் வேளாண்மை உதவி இயக்குனர் திலகவதி பயிற்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.