Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மண்வள மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி: பெருமாள் மலை கோயில் பாலாலயம் நிகழ்ச்சி

ஈரோடு, ஜூலை 13: ஈரோட்டில் பிரசித்தி பெற்ற பெருமாள் மலை கோயில் கும்பாபிஷேக திருப்பணிக்கான பாலாலயம் நிகழ்ச்சி நடந்தது. இதில், அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு வழிபட்டார். ஈரோட்டில் இருந்து பவானி செல்லும் சாலையில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் அமைந்துள்ள பெருமாள் மலையில் 1,500 ஆண்டுகள் பழமையான பிரசித்தி பெற்ற மங்களகிரி பெருமாள் கோயில் உள்ளது.

இக்கோயிலில் கும்பாபிஷேக விழா கடைசியாக கடந்த 1926ம் நடத்தப்பட்டது. அதன்பிறகு கும்பாபிஷேக விழா நடக்கவில்லை. இதையடுத்து பக்தர்கள் பெருமாள் மலை மங்களகிரி பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டது. 98 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேக பணிகள் துவங்கப்பட உள்ளது. இதற்காக கோயிலின் வளாகத்தில் யாகம் வளர்க்கப்பட்டு, பாலாலயம் நிகழ்ச்சி நடந்தது.

இதில் அமைச்சர் முத்துசாமி, மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், அறங்காவலர் குழுத்தலைவர் எல்லப்பாளையம் சிவகுமார், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்ஜோதி, ஆய்வர்கள் மாணிக்கம், தேன்மொழி, 1வது மண்டல தலைவர் பழனிசாமி, கவுன்சிலர்கள் ஜெகதீசன், மங்கையர்கரசி, திமுக மாநகர செயலாளர் சுப்பிரமணியன் மற்றும் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டு வழிபட்டனர். பாலாலயத்துக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் கயல்விழி செய்திருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் பெருமாள் மலை கோயிலுக்கு செல்ல சாலை அமைக்கும் பணிக்கான ஆய்வும் நடந்தது குறிப்பிடத்தக்கது.