Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மண்வளம் காத்து அதிக மகசூல் பெற விவசாயிகள் திரவ உயிர்உரங்களை பயன்படுத்த வேண்டும்

பெரம்பலூர்,மே.14: பெரம்பலூர் மாவட்டத்தில்மண்வளம்காத்து அதிக மகசூல்பெற விவசாயிகள் திரவ உயிர்உரங்களை பயன்படுத்த வேண்டும்- பெரம்பலூர் மாவட்ட வேளாண்மைத்துறை இணை இயக்குநர் கீதா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது :விளைநிலங்களின் உயர் விளைச்சல் ரகங்களுக்கு, தொடர்ந்து ரசாயன உரங்களை அதிகளவில் பயன்படுத்துவதால் மண் வளம் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. திரவஉயிர் உரங்கள் இடுவதன் மூலம் மண்ணின் வளத்தை நிலைநிறுத்தி, நிலையான உணவு உற்பத்தியை பெற முடியும்.

விவசாயிகள் தங்கள் வேளாண் நிலங்களின் மண்வளத்தை பாதுகாக்கவும், அதிக மகசூல் மூலம் கூடுதல் வருமானம் பெற வும் திரவ உயிர்உரங்களை பயன்படுத்த வேண்டும். ரசாயன உரங்களை தொடர்ச்சியாக பயிர்களுக்கு இடுவதால் மண்ணின் தன்மை மாறுபாடு அடைந்து மண்வளம் குன்றுகிறது. மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் அழிந்து வருகிறது. இதனை தவிர்க்க உயிர் உரங்கள் மற்றும் அங்கக உரங்களை பயன்படுத்துவதன் மூலம் மண்ணில் உள்ள உயிரியியல் செயல்பாட்டை அதிகப்படுத்தி மண்வளத்தை பாதுகாப்பதன் மூலம் நீடித்த நிலையான வேளாண்மைக்கு வழிவகுக்கலாம். அசோஸ் பைரில்லம் மற்றும் ரைசோபியம் நுண்ணுயிரிகள் காற்றிலுள்ள நைட்ரஜன் வாயுவை மண்ணின் நிலைப்படுத்தி, தழைச்சத்தாக மாற்றி வளரும் பயிருக்கு வளமூட்டுகிறது.

பாஸ்போபாக்டீரியா மண் ணில் கிட்டா நிலையில் உள்ள மணிச் சத்தினை கரைத்து பயிர்களுக்கு எளிதில் கிடைக்கச் செய்கி றது.பொட்டாஷ் பாக்டீரியா மண்ணில் உள்ள சாம்பல் சத்தை பிரித்து பயிர்களு க்கு தருகிறது.மேலும் திரவ உயிர் உரங்களை பயன்ப டுத்துவதன் மூலம் ரசாயன உரங்களின் பயன் பாட்டை 25 சதவீதம் வரை குறைக்கலாம்.இதன் மூலம் நிகர சாகுபடி செலவையும்குறைக்கலாம்திரவ உயிர் உரங்கள் பயி ரின் நோய் எதிர்ப்புத் திற னை மேம்படுத்துவதுடன் பயிர் வளர்ச்சி ஊக்கிகளை யும் உற்பத்தி செய்து பயிர் வளர்ச்சியை துரிதபடுத்து கின்றன. பயிர்கள் வறட்சியை தாங்கி வளரும் ஆற் றலையும் பெறுகின்றன. இதன் மூலம் 15 முதல் 20 சதவீதம் வரை பயிரின் மக சூல் அதிகரிக்கிறது. இரசா யன உரங்களின் பயன் பாடு குறைவதால் சுற்றுச் சூழல் மாசடைவதும் குறை கிறது.

இரசாயன உரங்களின் இறக்குமதி குறைவதால் நாட்டின் அந்நிய செல வாணி மிச்சமாகிறது. எனவே பெரம்பலூர் மாவட் டத்தில் உள்ள அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் நெல் மற் றும் இதர பயிர் வகைகளு க்கு அசோஸ்பைரில்லமும் பயறு வகை மற்றும் நிலக் கடைலைகளுக்கு ரைசோ பியமும் அனைத்து பயிர்க ளுக்கும் பாஸ்போபாக்டீ ரியா ஆகியவற்றை ஒருங் கே பயிர்களுக்கு வழங்கக் கூடிய அசோபாஸ் மற்றும் சாம்பல் சத்தை பயிர்க ளுக்கு வழங்கும் திரவ பொட்டாஷ் பாக்டீரியா என ஏழு வகையான திரவ உயிர் உரங்கள் விநியோகி க்கப்பட்டு வருகிறது.

உயிர் உரங்களை ரசாயன உரங்கள் மற்றும் பூச் சிக்கொல்லிகளுடன் கல ந்து உபயோகிக்கக்கூடாது. உயிர் உரங்களை குறைந்த வெப்பத்தில் நேரடி சூரிய வெப்பம் படாமல் பாது காத்து வைக்க வேண்டும். விதைகளை பூஞ்சாண கொல்லியுடன் விதை நேர்த்தி செய்து பின்பு கடைசியாக உயிர் உரங்க ளுடன் விதை நேர்த்தி செய்ய வேண்டும். இத்திட திரவ உயிர் உரங்கள் 500 மில்லி அளவுள்ள கொள் கலன் ஒன்றின் விலை ரூபாய் 150 ஆகும். எனவே விவசாயிகள் திரவ உயிர் உரங்களை பயன்படுத்தி மண்வளம் காத்து அதிக மகசூல்பெற்று பயன்பெற வேண்டும் எனத் தெரிவித் துள்ளார்.