Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மணவாளநகரில் நீர்நிலை விழிப்புணர்வு பேரணி: மரக்கன்று, மஞ்சப்பை வழங்கப்பட்டது

திருவள்ளூர், ஜன. 8: திருவள்ளூர் அடுத்த வெங்கத்துார் ஊராட்சி, மணவாளநகர் பகுதியில் அமைந்துள்ளது வெங்கத்துார் ஏரி. பொதுப்பணி்த் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி 360 ஏக்கர் பரப்பளவு மற்றும் 2 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இந்த ஏரியை நீர்வளத்துறை அதிகாரிகள் அனுமதியுடன் மணவாளநகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கடந்த 2021ம் ஆண்டு முதல் மரக்கன்றுகள் மற்றும் பனை விதைகளை நட்டு பராமரித்து வருகி்ன்றனர். இதுவரை 2,200 பனை விதைகள் மற்றும் 760 மரக்கன்றுகளை நட்டுள்ளனர்.

இந்த ஆண்டுக்குள் வெங்கத்துார் ஏரியில் 5 ஆயிரம் பனை விதைகள் மற்றும் 3 ஆயிரம் மரக்கன்றுகள் நட திட்டமிட்டு பணிகளை மேற்கொண்டு வருகி்ன்றனர். இந்நிலையில் 100வது வார களப்பணியை முன்னிட்டு நீர்நிலை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணி மணவாளநகர் இந்திரா காந்தி சிலை அருகே தொடங்கி வெங்கத்துார் ஏரிக் கரையை அடைந்தது. இதில் மணவாளநகர் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி கலந்துகொண்டு பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ப.ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் உதவி பொறியாளர் சு.சபரிநாதன், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் 500 மரக்கன்றுகள் மற்றும் பேரணியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மஞ்சப்பையை வழங்கினார். சுற்றுச் சுழல், நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாக்காகவே மரக்கன்றுகள் மற்றும் பனை விதை நடும் பணியை மேற்கொண்டு வருவதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். இதில் மணவாள நகர் குடியிருப்போர் நலச் சங்கம் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளின் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.