திருச்சி, மே 20: மணல் கடத்தி வந்த வேனை மடக்கி பிடித்தபோது, தப்பியோடிய டிரைவர் மீது வழக்கு பதிந்து தேடி வருகின்றனர். திருச்சி காந்தி மார்க்கெட் போலீசார் நேற்று முன்தினம் திருச்சி-சென்னை பைபாஸ் சாலை பால்பண்ணை சர்வீஸ் சாலையில் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த வேன் ஒன்றை போலீசார் நிறுத்தினர். வேனை நிறுத்திய டிரைவர், அங்கிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் ஒட்டமெடுத்தார். போலீசார் வேனை சோதனை செய்ததில், ஒரு யூனிட் மணலை உரிய ஆவணங்களின்றி வேனில் கடத்தி வந்தது தெரியவந்தது. வேனை பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிந்து, தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர்.
+
Advertisement