Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மடத்துக்குளத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

திருப்பூர், அக்.15: திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டத்தில் நாளை (16ம் தேதி) காலை 9 மணி முதல் நாளை மறுநாள் (17ம் தேதி) காலை 9 மணி வரை உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் மடத்துக்குளத்தில் முகாம் நடைபெறுகிறது.

இம்முகாமில் அரசு அலுவலகங்கள்,ஆரம்ப சுகாதார நிலையங்கள்,கூட்டுறவு சங்கங்கள்,பள்ளிகள்,தாலுகா அலுவலகங்கள்,அரசு விடுதிகள் உள்ளிட்டவைகள் ஆய்வு செய்யப்பட இருக்கின்றன.பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து அதற்கு தீர்வு காணப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.