தேன்கனிக்கோட்டை, ஜூலை 6: கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே நாகசந்திரம் கிராமத்தில் ஜங்கமம் மடம் உள்ளது. இங்கு வேத ஆகமம் பயிற்று விக்கப்படுகிறது. மடத்தை சித்தலிங்க சாமியார் (67) என்பவர் நிர்வகித்து வருகிறார். இந்த மடத்தில் தாய், தந்தை இல்லாத சரண் (16) என்ற சிறுவன், கடந்த 10 வருடங்களாக தங்கி வேத ஆகமம் படித்து வந்தான். கடந்த 3ம் தேதி சித்தலிங்க சாமியார், ஒசஹள்ளிக்கு பூஜைக்கு சென்றுள்ளார். அப்போது, சிறுவன் சரண் தன்னிச்சையாக வெளியே சென்ற நிலையில், மீண்டும் மடத்திற்கு திரும்பி வரவில்லை. அதிரச்சியடைந்த நிர்வாகி பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால், எங்கும் கிடைக்காததால் சித்தலிங்க சாமியார், தளி போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். இதன் பேரில், தளி இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
+
Advertisement


