Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ப்ரண்ட்லைன் பள்ளியில் மாணவர் தலைவர்கள் பதவியேற்பு விழா

திருப்பூர், ஜூலை 7:திருப்பூர் மாநகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட பகுதியில் மேயர் தினேஷ்குமார் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்து வருகிறார். இந்த ஆய்வின் போது பொதுமக்கள் கொடுக்கும் கோரிக்கைகள் மீதும் நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்நிலையில் திருப்பூர் கே.பி.என். காலனி பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவை சீரமைப்பது குறித்து மேயர் தினேஷ்குமார் ஆய்வு செய்தார்.அப்போது அங்குள்ள குப்பைகளை அகற்றி சுத்தம் செய்து, பழுதான எந்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை மாற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதில், மாநகராட்சி கமிஷனர் பவன்குமார், தலைமை பொறியாளர் திருமாவளவன், கவுன்சிலர் முத்துகிருஷ்ணன், உதவி செயற்பொறியாளர் முனியாண்டி மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

திருப்பூர், ஜூலை 7: திருப்பூர் பெருந்தொழுவில் உள்ள ப்ரண்ட்லைன் மில்லேனியம் பள்ளியில் மாணவர் தலைவர்களுக்கான பதவியேற்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் கலந்துகொண்டு பேசினார். மாணவ தலைவர், விளையாட்டு துறைக்கான தலைவர் மற்றும் பல்வேறு சங்கங்களுக்கான தலைவர்களுக்கு சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன், பள்ளி தாளாளர் சிவசாமி, செயலாளர் சிவகாமி, முதல்வர் லாவண்யா மற்றும் தலைமை ஆசிரியை கமலாம்பாள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் பட்டம் வழங்கினர்.மாணவர் தலைவராக 12ம் வகுப்பு மாணவர் ரெமி, மாணவி தலைவியாக 12ம் வகுப்பு மாணவி ரிதன்யா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். விளையாட்டுத்துறையின் தலைவராக 12ம் வகுப்பு மாணவி பவித்ரலட்சுமி, துணைத்தலைவராக 11ம் வகுப்பு மாணவர் பிரணவ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும், லைரா, ஹெர்குலஸ், பெகாசஸ், ஒரைன் முதலான குழுக்களின் தலைவர்களும், அறிவியல், கணிதம், பாரம்பரியம், விண்வெளி, வினாடி, வினா முதலான சங்கங்களின் தலைவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.