Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

போதைப்பொருள் விற்பனை செய்தால் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்: கலெக்டர் தகவல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனை செய்யும் மர்ம நபர்கள் குறித்து, பொதுமக்கள் தொலைபேசி எண்களில் புகார் தெரிவிக்கலாம் என்று கலெக்டர் கலைச்செல்வி மோகன், எஸ்பி சண்முகம் ஆகியோர் தெரிவித்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் மற்றும் போலீஸ் எஸ்பி சண்முகம் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் உற்பத்தி, விற்பனை, கடத்தல் செயல்கள், கஞ்சா, குட்கா, பான் மசாலா போன்ற தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பனை நடைபெறுவது குறித்து தெரியவந்தால், மேற்கண்ட செயல்கள் நடைபெறும் இடம், ஈடுபடும் நபர்கள் குறித்த தகவல்களை ரகசியமாக பொதுமக்கள் தெரிவிக்க தொடர்பு எண்கள் அறிவிக்கப்படுகிறது.

அதன்படி, மாவட்ட கலெக்டர் 94441 34000, மாவட்ட போலீஸ் எஸ்பி 94442 12749, மதுவிலக்கு பிரிவில் வாட்ஸ் அப் எண்: 82489 86885, சென்னை கட்டுப்பாடு அறை கட்டணமில்லா தொலைபேசி எண் 10581 ஆகிய எண்களுக்கு தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு தகவல் தெரிவிக்கும் நபர்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.