பொள்ளாச்சி, 26: கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில், தென்னை வாடல் நோய் மீட்பு திட்டம் குறித்து, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனர் குமார பாண்டியன் நேரில், வாடல் நோய் பாதிக்கப்பட்ட தென்னைகளை ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து, தென்னை வாடல் நோய் மீட்பு திட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும், பசுமை குடில் அமைத்த விவசாயிகளின் வயலை கள ஆய்வு மேற்கொண்டார்.
தோட்டக்கலைத்துறை இயக்குனர் குமாரவேல் கூறுகையில், ‘கோவை மாவட்டத்தில் 91,809 ஹெக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது. இதில் பல தென்னைகளில் கேரள வாடல் நோயால் பாதிக்கப்பட் டுள்ளது தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட மரங்களை வெட்டி அகற்ற ஒரு விவசாயிக்கு ஒரு ஹெக்டேரில் அதிகபட்சமாக 32 தென்னை மரங்களுக்கு தலா ரூ.1000 என மொத்தம் ரூ.32 ஆயிரம் வழங்கப்படுகிறது. மேலும், மறு நடவு செய்ய இலவசமாக தென்னை மரக்கன்றுகளும் உயிர் உரங்களும் வழங்கப்படுகிறது’ என்றார்.