காஞ்சிபுரம், ஏப்.28: காஞ்சிபுரம் வடக்கு ஒன்றியம் திருப்புட்குழி ஊராட்சி பாலு செட்டி சத்திரத்தில் திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தண்ணீர் பந்தல் திறப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ தண்ணீர் பந்தலை திறந்து வைத்து நீர், மோர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் தொகுதி எம்பி செல்வம், காஞ்சிபுரம் தொகுதி எம்எல்ஏ ஏழிலரசன் ஆகியோர் கலந்து கொண்டனர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதனைத்தொடர்ந்து, தினமும் ஒரு நிர்வாகி என்ற முறையில் மக்களுக்கு நீர், மோர், ஆரஞ்சு பழச்சாறு திமுக நிர்வாகிகள் வழங்கி வருகின்றனர். கிளை செயலாளர் ஜானகிராமன், சமையல் ரவி ஆகியோர் ஏற்பாட்டில் தயிர்சாதம், சாம்பார் சாதம், திராட்சை பழச்சாறு வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் கிளை செயலாளர்கள் பாலசந்தர், பார்த்தசாரதி, ரமேஷ், பாக்கியராஜ், சரவணன், ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் பாலகிருஷ்ணன், முன்னோடிகள் நூருல்லாபாய், சீனிவாசன், கோட்டீஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.