திருக்கோவிலூர், ஜூலை 14: திருக்கோவிலூர் அடுத்த மரூர் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் மணி மகன் பரமசிவம் (42), விவசாயி. இவர் தனக்கு சொந்தமான பைக்கில் மாடாம்பூண்டி கூட்ரோட்டில் இருந்து சங்கராபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இதுபோன்று திருக்கோவிலூர் அடுத்த காட்டுப்பையூர் கிராமத்தை சேர்ந்த ராஜா மகன் கோபாலகிருஷ்ணன் (32) என்பவர் அவரது தங்கை கனகனந்தலை சேர்ந்த முருகன் மனைவி ராஜேஸ்வரி (28), அவரது பிள்ளைகள் ஜெகதீஸ்வரி (2), எழிலரசன் (4) ஆகியோருடன் ராவுத்தநல்லூர் கோயிலுக்கு ஒரே பைக்கில் சென்றுவிட்டு மீண்டும் திரும்பினர்.
அப்போது கடம்பூர் அருகே பரமசிவம் ஓட்டி வந்த பைக்கும், கோபாலகிருஷ்ணன் ஓட்டி வந்த பைக்கும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அனைவரையும் வழியாக சென்றவர்கள் மீட்டு கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரமசிவம் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திருப்பாலப்பந்தல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


