Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் சிறப்பு தொழில்நுட்ப கருத்தரங்கம்

ஈரோடு,மே10: பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் சிறப்பு தொழில்நுட்பக் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு கல்லூரியின் தாளாளர்இளங்கோ தலைமை வகித்தார்.முதல்வர் முனைவர் பாலுசாமி வரவேற்றார்.  இதில் பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம் (சிஎஸ்ஐஆர்) பொது இயக்குநரும், அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி துறை (டிஎஸ்ஐஆர்) செயலாளருமான முனைவர்கலைச்செல்வி கலந்துகொண்டு பேசியதாவது: அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளில் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும்.

இந்தியா மற்றும் உலகம் முழுமைக்கும் பயனளிக்கும் திறன்களை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். நாடு முழுவதும் 37 ஆய்வகங்கள் மூலம் இயங்கி வரும் அதன் 82 ஆண்டு கால வரலாற்றில் சிஎஸ்ஐஆர்-ன் விரிவான பங்களிப்புகளையும் அவர் விவரித்துக் கூறினார்.இந்த பங்களிப்புகள் மரபியல், கட்டுமானம், பெட்ரோலியம், உணவு பதப்படுத்துதல்,சுரங்கம் மற்றும் விவசாயம் போன்ற பல்வேறு துறைகளில் பரவியுள்ளது. சிஎஸ்ஐஆர் திட்டங்களில் ஹெச்ஏபிஎஸ்,ஸ்லாக் சாலைகள்,ரெஜுபவ் தொழில்நுட்பம், நிலையான விமான எரிபொருள் ஆகிய திட்டங்கள் சர்வேதச தரத்துடன் செய்யப்பட்டுள்ள முக்கிய திட்டங்கள் என தெரிவித்து பேசினார்.இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் செல்ப் டெவெலப்மென்ட் கிளப் செய்திருந்தது.