Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பெரியார் படிப்பக வாசகர் வட்ட கருத்தரங்கம்

ஈரோடு, ஜூலை 13: பெரியார் படிப்பக வாசகர் வட்டம் சார்பில் ஈரோடு பெரியார் மன்றத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. வாசகர் வட்டம் செயலாளர் கவிதா நந்தகோபால் வரவேற்புரையாற்றினார். திராவிடர் கழகம் பேராசிரியர் காளிமுத்து வாழ்த்துரை வழங்கினார். வாசகர் வட்டம் தலைவர் அனிச்சம் கனிமொழி தலைமையுரையாற்றினார். திராவிட இயக்கமும் கல்வியும் என்ற தலைப்பில் திமுக வழக்கறிஞரணி இணை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேசினார்.

தமிழ்நாடு 1967 என்ற தலைப்பில் திமுக அயலக அணி செயலாளரும், எம்பியுமான அப்துல்லா பேசினார். முடிவில் ஆனந்தலட்சுமி நன்றிரையாற்றினார். கருத்தரங்கில் திராவிடர் கழக மாநில அமைப்பு செயலாளர் ஈரோடு சண்முகம், திமுக மாநகர செயலாளர் சுப்ரமணியம் சென்னிமலை ஒன்றிய செயலாளர் செங்கோட்டையன், திமுக பொருளாளர் பழனிச்சாமி, பகுதி செயலாளர்கள் குறிஞ்சி தண்டபாணி, ராமச்சந்திரன், நடராஜன், அக்னி சந்துரு, மாநகர துணை செயலாளர் சந்திரசேகரன், இலக்கிய அணி அமைப்பாளர் இளையகோபால், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திருவாசகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.