Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பெரம்பலூர் உள்ளிட்ட 3 ஒன்றியங்களில் 255 மையங்களில் எழுத்தறிவு மதிப்பீட்டு தேர்வு

பெரம்பலூர், நவ. 11: பெரம்பலூர், வேப்பந் தட்டை, வேப்பூர் ஆகிய 3 ஒன்றியங்களில் நடந்த புதியபாரத எழுத்தறிவுத் திட்ட கற்போர்களுக்கான எழுத்தறிவு மதிப்பீட்டுத் தேர்வு-255 மையங்களில் 4428 பேர் எழுதினர். பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி திட்டத்தின் மூலம் புதிய பாரத எழுத்தறிவு திட்ட கற்போர்க ளுக்கான எழுத்தறிவு மதிப் பீட்டுத்தேர்வு நேற்று (10ஆம் தேதி) ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. இத்திட்டத்தில் 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுத்தறிவு பெறாத கற்போர்களுக்கு எழுத் தறிவு எண்ணறிவு மற்றும் வாழ்வியல் திறன் சார்ந்த பயிற்சி வழங்கப்பட்டு நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் மதிப்பீட்டுத் தேர்வு நடைபெற்றது.

பெரம்பலூர் ஒன்றியத்தில் 52 மையங்களில் 816 கற்போர்கள்,வேப்பந்தட்டை ஒன்றியத்தில் 92 மையங்களில் 1608 கற்போர்கள், வேப்பூர் ஒன்றியத்தில் 111 மையங்களில் 2004 கற்போர்கள் என மொத்தம் பெரம்பலூர், வேப்பந்தட்டை, வேப்பூர் ஆகிய 3ஒன்றியங்களில் 255 மையங்களில் 4428 கற்போர்கள் எழுத்தறிவு மதிப்பீட்டுத் தேர்வினை எழுதினர். கற்போர் மைய பள்ளி தலைமையாசிரியர் கள் மற்றும் தன்னார்வலர் கள் இந்தத் தேர்வினை நடத்தினர்.

பெரம்பலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முருகம்மாள், பெரம்பலூர் ஒன்றியத்தில் பெரம்பலூர் முத்துநகர் மற்றும் பெரம்பலூர் கிழக்கு பள்ளியில் நடை பெற்ற எழுத்தறிவு மதிப்பீட்டுத் தேர்வினை பார்வை யிட்டார். இதே போல் பெரம்பலூர் மாவட்ட கல்வி அலுவலர் பொறுப்பு (இடை நிலை) மரகதவல்லி, பெரம்பலூர் மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க நிலை) அய்யாசாமி, பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் உதவி த்திட்ட அலுவலர் ஜெய்சங் கர், மாவட்ட ஆசிரியர்கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவு ரையாளர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், மாவ ட்ட ஒருங்கிணைப் பாளர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர் கள் மற்றும் ஆசிரியர் பயிற்று நர்கள் கற்போர் மையங்களில் எழுத்தறிவு மதிப்பீட்டு தேர்வினை பார்வையிட்டனர்.