Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பெரம்பலூர் /அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பெரம்பலூர் கலெக்டர் ஆய்வு

வேப்பந்தட்டையில் அரசு கல்லூரி தொடங்கி 10 ஆண்டுகள் முடிவடைந்து 11ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. நடப்பாண்டு நாட்டு நலப்பணித் திட்டம், இளைஞர் செஞ்சிலுவை சங்கம், இளைஞர் செஞ் சுருள் சங்கம், உடற்திறன் மேம்பாட்டு பயிற்சி, வேலை வாய்ப்பு வழிகாட்டிமையம் செயல்பட்டு வருகிறது. கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு எஸ்.சி, எஸ்.டி, பிசி, எம்.பிசி, டிஎன். சி மற்றும் சிறுபான்மையி னர் நலத்துறைகள் மூலம் கல்வி உதவித்தொகை பெற்றுத் தரப்படுகிறது.

தமிழக அரசின் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு உதவித் தொகை பெற்றுத் தரப்படுகிறது. இக்கல்லூரியில் தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டுதல் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. மேலும் கணினி சிறப்புப் பயிற்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

வேப்பந்தட்டை அரசுக் கல்லூரியின் மாணவர் சேர்க்கை தொடர்பாக கூடுதல் விபரங்களைப் பெற கல்லூரி முதல்வரை 94435 94389 என்ற எண்ணி லும், ஒருங்கிணைப்பாளர் களை 99427 77745, 84281 03099, 80982 17602, 70946 54480 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.