சேலம், ஜூன் 15: சேலம் அன்னதானப்பட்டி நியூகந்தப்பா காலனி கணபதி நகரை சேர்ந்தவர் விஜயகுமார். வெல்டிங் பட்டறை வைத்துள்ளார். இவரது மனைவி மகேஸ்வரி(40). நேற்றுமுன்தினம் மகன் மணிகண்டனுடன் உறவினர்கள் திருமணத்திற்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். மாலை 3 மணியளவில் வீட்டின் அருகில் வந்தபோது, எதிர்பகுதியில் டூவீலரில் வந்த வாலிபர், மகேஸ்வரி அணிந்திருந்த 8 பவுன் தாலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் சென்றுவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த மகேஸ்வரி, அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சின்னதங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்பகுதியில் இருக்கும் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த வழிப்பறி சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
+
Advertisement


