திருப்போரூர், ஜூலை 14: திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய கேளம்பாக்கம் ஊராட்சியில் பெண்களுக்கான அமைப்பு தொழில் சாரா ஆட்டோ ஓட்டுநர் சங்க நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் ஒரு லட்சம் மானிய விலையில் ஆட்டோ பெறுவதற்கான, ஆட்டோ ஓட்டுநர் பயிற்சி முகாம் துவக்க விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.
கேளம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ராணி எல்லப்பன் தலைமை தாங்கினார். தகவல் தொழில்நுட்ப அணியின் ஒருங்கிணைப்பாளர் எல்லப்பன் வரவேற்றார். திருப்போரூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளரும், தலைவருமான இதயவர்மன் பங்கேற்று, பெண்களுக்கான நல வாரிய சேர்க்கை முகாமினை தொடங்கி வைத்து, பெண்கள் ஆட்டோ ஓட்டுநர் பயிற்சி பெறும் வாகனத்தை கொடியசைத்து அனுப்பினார்.
இந்நிகழ்ச்சியில் திமுக மகளிர் அணி ஒன்றிய அமைப்பாளர் சசிகலா, தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பர்வீன் நிஷா, திருப்போரூர் வடக்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ஜெகன், செந்தில், கேளம்பாக்கம் ஊராட்சி திமுக நிர்வாகிகள் அசுந்தன், ரெய்ன்ஷா, அப்துல் சுக்கூர், ரமேஷ், சிவக்குமார், முருகேசன், ஜெயபாலன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
முகாமில் திருப்போரூர், கேளம்பாக்கம், படூர், புதுப்பாக்கம், நாவலூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்தும் சுமார் 100க்கும் மேற்பட்ட மகளிர்கள் பங்கேற்று, பயனடைந்தனர்.