Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பூ வியாபாரியின் வீட்டிற்கு பூட்டு பெண்கள் தர்ணா போராட்டம் ஆரணியில் பரபரப்பு சீட்டு நடத்தி மோசடி செய்த

ஆரணி, மே 7: ஆரணியில் சீட்டு நடத்தி மோசடி செய்த பூ வியாபாரியின் வீட்டிற்கு பூட்டு போட்டு பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் முருகன்(39), பூ வியாபாரி. இவர் நடிகர் விஜய் கட்சியில் ஆரணி தொகுதி தலைவராக இருந்து வருகிறார். இவரது மனைவி ஆனந்தவள்ளி. இருவரும் சேர்ந்து கடந்த சில ஆண்டுகளாக மாத சீட்டு நடத்தி வந்துள்ளனர். அப்போது, 60க்கும் மேற்பட்ட நபர்கள் ₹50 ஆயிரம் முதல் ₹2 லட்சம் வரை பணம் கட்டி வந்துள்ளனர். இதற்கிடையில் சில ஆண்டுகளுக்கு முன்பு அவரது மனைவி ஆனந்தவள்ளி இறந்துவிட்டார். இதனால், அந்த சீட்டுகளை முருகனே நடத்தி வந்துள்ளார். அப்போது, சீட்டில் முருகன் தனது உறவினர்கள், நண்பர்கள் பெயரில் இவரே சீட்டுபோட்டு, அதனை முருகனே எடுத்து வந்துள்ளார். அதன்பின்னர், சீட்டினை எடுத்தவர்கள் பணத்தை செலுத்தவில்லை என கூறி மோசடி செய்த முருகன், சீட்டு கட்டியவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்காமல் இருந்துள்ளார்.

மேலும், சீட்டு எடுத்தவர்கள் பணத்தை கொடுத்தால் அனைவருக்கும் திருப்பி தருகிறேன் என பல்வேறு காரணங்களை கூறி பணத்தை கொடுக்காமல் அலைக்கழித்து வந்துள்ளார். இந்நிலையில், சீட்டு பணத்தை மீட்டுதரக்கோரி எஸ்பி அலுவலகம், காவல் துறையிடம் பலமுறை புகார் அளிக்கப்பட்டது. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்காதால், ஆத்திரமடைந்த 20க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று முருகன் வீட்டிற்கு சென்று அவர் வீட்டில் இருந்தபோது, வீட்டின் முன்பகுதியில் உள்ள கேட்டினை பூட்டி தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த ஆரணி டவுன் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறி பெண்கள் பூட்டிய பூட்டை திறந்து முருகனை மீட்டு கால்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். ஆரணியில் சீட்டு நடத்தி பெண்களிடம் மோசடியில் ஈடுபட்டவரின் வீட்டிற்கு பூட்டுபோட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.