Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பூட்டிய வீட்டில் இரும்பு கடைக்காரர் சடலம் மீட்பு

சேலம், ஜூன் 7: சேலம் சூரமங்கலம் திருவாகவுண்டனூர் பண்டக்காரவட்டத்தை சேர்ந்தவர் பாலாஜி(58). இவர் அதேபகுதியில் பழைய இரும்பு கடை வைத்துள்ளார். இவருக்கு இரண்டு மனைவிகள். அந்த பகுதியில் இவர் கடந்த 15 வருடமாக வாடகை வீட்டில் வசித்து வந்தார். கடந்த 3 நாட்களாக இவரது வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. நேற்று காலை அவரது வீட்டில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது. இதுபற்றி அப்பகுதி மக்கள் சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து சென்ற போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு பாலாஜி அழுகிய நிலையில் இறந்து கிடப்பது தெரிந்தது. இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் விசாரணையில், பாலாஜி பல்வேறு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இரண்டு மனைவிகளும் பிரிந்து சென்றுவிட்டனர். அதன்பின்னர் தனியாக வசித்து வந்த பாலாஜிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.