Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பூக்கள் உற்பத்தி அதிகமாக இருப்பதால் ரங்கத்தில் சென்ட் பேக்டரி அமைக்கப்படும் திமுக வேட்பாளர் அருண்நேரு இறுதிகட்ட பிரசாரத்தில் வாக்குறுதி

சமயபுரம், ஏப்.18: பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு நேற்று இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். நேற்று காலை மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நம்பர் ஒன் டோல்கேட், வாளாடி, கூத்தூர், தாளக்குடி, சமயபுரம், மண்ணச்சநல்லூர் , நொச்சியம், அய்யம்பாளையம் ஆகிய பகுதிகளில் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

திமுக வேட்பாளர் அருண்நேருவை ஆதரித்து எம்எல்ஏக்கள் மண்ணச்சநல்லூர் கதிரவன், முசிறி தியாகராஜன், காங்கிரஸ் வடக்கு மாவட்ட தலைவர் கலை, மண்ணச்சநல்லூர், சமயபுரம் பேரூராட்சி தலைவர்கள் ஆகியோர் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.சமயபுரம், மண்ணச்சநல்லூர் பகுதியில் திமுக வேட்பாளர் அருண்நேரு பேசியதாவது: இங்கு விளையும் நெல்லுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டு மக்களின் மத்தியில் பெரும் வரவேற்பு உண்டு. எனவே மண்ணச்சநல்லூர் அரிசிக்கு புவிசார் குறியீடு கிடைக்கவும், அரிசி ஆலைகள் அதிகம் உள்ள பகுதி இது என்பதால் சப் ஸ்டேஷன் அதாவது கூடுதல் துணை மின் நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்வேன். மேலும் திருப்பைஞ்ஞீலீ , ஈச்சம்பட்டி, மூவராயன்பாளையம் கிராம பகுதியில் அதிகமாக விளையும் பூக்களை வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் ரங்கம் பூமார்க்கெட்டில் விற்பனை செய்து வருகின்றனர்.

அவர்களின் நலன் கருத்தி மண்ணச்சநல்லூர், நொச்சியத்தில் இருந்து ரங்கத்திற்கு செல்ல பாலம் அமைக்கப்படும். மற்றும் பூக்கள் அதிகளவு உற்பத்தி செய்யப்படுவதால் மலர்களில் இருந்து தயாரிக்கப்படும் சென்ட் பேக்டரி அமைக்க ஏற்பாடு மேற்கொள்வேன்.

அதுமட்டுமின்றி நலிந்து போன கல்பட்டறை தொழிலுக்காக சீனாவில் இருந்து செயற்கை ஆபரண கற்கள் இறக்குமதியால் மண்ணச்சநல்லூர் பகுதியில் கல்பட்டறைக்கு ஈடாக கைத்தொழில் மூலம் வருவாய் கிடைத்திடும் வகையில் மாற்று ஏற்பாடு செய்திட நடவடிக்கை எடுப்பேன்.

மேலும் ஆன்மிகத்தின் அடையாளமாக திகழும் சமயபுரம் மாரியம்மன் கோயில், திருப்பட்டூர் பிரம்மா கோயில், வெங்கனூர் விருதாச்சலேஸ்வரர் கோயில் போன்ற புனித தலங்களில் தினந்தோறும் வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் சிறப்பாக செய்து தர முயற்சி மேற்கொள்வேன் என உறுதி அளித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இந்த பிரசார நிகழ்வில் மண்ணச்சநல்லூர், சமயபுரம் ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், பேரூராட்சி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், கவுன்சிலர்கள், திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, விசிக, மனிதநேய மக்கள் கட்சி, சிபிஎம் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

திமுக வேட்பாளர் அருண் நேரு, நேற்று மாலை 4:30 மணிஅளவில், பெரம்பலூர் கனரா வங்கி சாலை சந் திப்பிலிருந்து நகரின் பிரதான சாலைகளில் பைக் பேரணி மூலம் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடு பட்டார். அமைச்சர் கே.என்.நேரு, திமுக பெரம்பலூர் மாவட்டப் பொறுப் பாளர் ஜெகதீசன், எம்எல்ஏ பிரபாகரன் உள்ளிட்டோர் திறந்த ஜீப்பில் சென்றபடி வாக்குகள் சேகரித்தனர். இதேபோல் குளித்தலையில் திமுக வேட்பாளர் அருண்நேரு, 500க்கு மேற்பட்ட இருசக்கர வாகன பேரணியுடன் குளித்தலை நகரத்தில் இறுதி கட்ட பிரசாரம் செய்தார்.