ஜெயங்கொண்டம், மார்ச் 19: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியம் புதுச்சாவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அரியலூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ் தமிழக அரசின் கல்வி இணை செயல்பாடுகளில் ஒன்றான வானவில் மன்ற செயல்பாடுகள் செயல் விளக்கம் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் சாந்தி தலைமை தாங்கி, வாழ்த்தி பேசினார். அறிவியல் பட்டதாரி ஆசிரியர் செங்குட்டுவன் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வரவேற்றார்.
வானவில் மன்ற கருத்தாளர் ஆனந்தவல்லி அமில நீக்கி செயல்பாடுகள் வயிற்றுப்புண் உருவாக காரணம், அமிலம் உறுதி சோதனை, அமிலங்கள் மீதான காரங்களின் விளைவு, ஒளியியல் வட்டு, வானவில் தோன்றும் விதம், நியூட்டன் நிற சோதனை, காற்று மாசுபாடு தீமைகள், முற்பட்டக நிறப்பிரிகை, பாஸ்கலின் முக்கோணம், தசம எண்களின் மாய கூட்டல் மற்றும் கணித செயல்பாடுஅழிந்து வரும் உயிரினங்களும் அவற்றை பாதுகாத்தலின் அவசியம் போன்ற செயல்பாடுகளை செய்து காண்பித்தார். மாணவர்கள் மிகுந்த ஆர்வங்களுடன் பங்கேற்றனர். மாணவி ஜமுனா நன்றி கூறினார்.