Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

புதுகை மாவட்டத்தில் நாட்டு படகுகள் ஆய்வு

புதுக்கோட்டை, மே 17: நடப்பாண்டிற்கான (2024-25) தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குமுறை சட்டம் 1983ன்படி, மீன்பிடி தடைகாலத்தில், அனைத்து வகை மீன்பிடி படகுகளை (பதிவு செய்யப்பட்டவை மற்றும் பதிவு செய்யப்படாதவை) ஆய்வு செய்வது குறித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நாட்டுப்படகுகளை 5.6.2024 மற்றும் 6.6.2024 அன்று சிறப்பு குழுக்கள் மூலம் நேரடி ஆய்வு செய்யப்படுவதை தொடர்ந்து, மீன்பிடி நாட்டுப்படகுகளை ஆய்வு செய்வது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மீனவ கிராம கூட்டுறவு சங்கத்திற்கும் மற்றும் மீனவ கிராமங்களுக்கும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் படகு ஆய்வின் போது நாட்டுப்படகு உரிமையாளர்களின் ஆதார் அட்டை, படகு பதிவு சான்றிதழ், டீசல் மானிய அட்டை, குடும்ப அட்டை, மற்றும் மீன்வளத்துறை மூலம் வழங்கப்பட்ட தொலை தொடர்பு சாதனங்கள் ஆகியவை ஆய்வுக்குழு வசம் ஆய்வுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும், மேலும் தங்களது நாட்டுப்படகினை தவறாது ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும ஆய்விற்கு உரிய ஆவணங்களுடன் உட்படுத்தப்படாத நாட்டுப்படகிற்கு மானிய டீசல் உடனடியாக நிறுத்தப்படும் எனவும், பதிவு ரத்து செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துக்கொள்ளப்டுகிறது. 5.6.2024 அன்று கட்டுமாவடி, அழகன்வயல், முடுக்குவயல், பிரதாபிராமன்பட்டினம், கிருஷ்ணாஜிப்பட்டினம், மேலஸ்தனம்,சீத்தாராமன்பட்டினம், மும்பாலை, பட்டாங்காடு, வடக்கு மணமேல்குடி, வடக்கம்மாப்பட்டினம், கீழக்குடியிருப்பு, பொன்னகரம், அந்தோணியார்புரம், துளசியாப்பட்டினம், அம்மாப்பட்டினம், ஆதிப்பட்டினம், புதுக்குடி மற்றும் கோட்டைப்பட்டினம் ஆகிய மீனவ கிராமங்களில் ஆய்வு செய்யப்படவுள்ளது.

அதனைத் தொடர்ந்து, 6.6.2024 அன்று செல்லனேந்தல், ஜெகதாப்பட்டினம், அய்யம்பட்டினம், ஏம்பவயல், முத்தனேந்தல், பாலக்குடி, குமரப்பன்வயல், கோபாலப்பட்டினம், மீமிசல், ஆர்.புதுப்பட்டினம், அரசநகரிப்பட்டினம், முத்துகுடா மற்றும் ஏனாதி ஆகிய மீனவ கிராமங்களில் ஆய்வு செய்யப்படவுள்ளது. மேலும், 5.6.2024 மற்றும் 6.6.2024 ஆகிய தேதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா, தெரிவித்துள்ளார்.