புதுக்கோட்டை,அக்.18: புதுக்கோட்டை டவுன் காவல்நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் நகை திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட பெண் குற்றவாளியை போலீசார் கைது செய்துனர். அவரிடமிருந்து ரூ.6.95 லட்சம் மதிப்புள்ள 17 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். புதுக்கோட்டை டவுன் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களில் நடைபெற்ற நகை திருட்டு வழக்குகளில் குற்றவாளியை கைது செய்ய போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தனிப்படையினர், தென்காசி மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்த காளிதாஸ் மனைவி நாகம்மாள் (30) என்பவரை கைது செய்து விசாணை நடத்தினர். விசாரணையில் அவர் திருடியது தெரியவந்தது. மேலும், அவரிடமிருந்து ரூ.6.95 லட்சம் மதிப்புள்ள 17 பவுன் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


