புதுச்சேரி, ஜூலை 10: பிரான்ஸ் நாட்டின் குடியுரிமை பெற்றவர் புதுச்சேரியில் தங்கியிருந்தபோது அவர் வெளியே சென்றிருந்த நேரத்தில் மர்ம நபர்கள் வீடு புகுந்து ரூ.7 லட்சம் பணத்தை திருடிச் சென்றுவிட்டனர். போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.புதுச்சேரி லாஸ்பேட்டை, ஏர்போர்ட் ரோடு, ஆழ்வார் தீர்த்த தெருவை சேர்ந்தவர் முகமது அலி (71). இவர் தற்போது புதுவைக்கு வந்து லாஸ்பேட்டை பகுதியில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 7 மணியளவில் இவர் தனது குடும்பத்துடன் வெளியே சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் ஜன்னல் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது இரும்பு அலமாரியை உடைத்து அதில் இருந்த ரூ.7 லட்சம் பணத்தை யாரோ மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து முகமுது அலி லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் வழக்கு பதிந்து ரூ.7 லட்சம் பணத்தை திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
+
Advertisement


