Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாரதியார் பல்கலை. பிஎச்டி மாணவர் சேர்க்கை

கோவை, ஜூன் 12: கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளிலும் கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளிலும் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களிலும் பிஎச்டி, பட்ட படிப்பிற்கான சேர்க்கை விண்ணப்பங்கள் இணைய தளம் (www.b-u.ac.in) வாயிலாக 12.06.2024 முதல் 30.06.2024 தேதி வரை வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பக்கட்டணமாக ரூ.1000 பிஎச்.டி ஆராய்ச்சி படிப்பிற்கும் (எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு ரூ.500, பிஎச்டி ஆராய்ச்சி படிப்பிற்கு சாதி சான்றிதழ்களுடன்) இணைய வழி வாயிலாக செலுத்தலாம். பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் பதிவாளர், பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்- 641046 என்ற முகவரிக்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் 30.06.2024 (மாலை 5 மணி வரை). கடைசி தேதிக்குப் பிறகு வரும் விண்ணப்பங்களும், உரிய கட்டணமின்றி பெறப்படும் விண்ணப்பங்களும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

ஜூலை 2024 பிஎச்.டி (பகுதி/முழு நேரம் ஆராய்ச்சிப் பட்டப்படிப்பிற்கான சேர்க்கையானது ஜூன் 2024 பொது நுழைவுத் தேர்வு அடிப்படையிலும், நேர்காணல் மற்றும் பாரதியார் பல்கலைக்கழக சட்ட விதிமுறைகளின் அடிப்படையில் நடைபெறும். மேலும் இது தொடர்பான விவரங்களை அறிய பல்கலைக்கழக இணையதளத்தை காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.