Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பழனி முருகன் கோயிலுக்கு ஜூலை 27ல் சர்க்கரை கொள்முதல்

ஈரோடு, ஜூலை 25: பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு ஜூலை 27ம் தேதி சர்க்கரை கொள்முதல் செய்யப்படவுள்ளது.பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பிரசாதங்கள் தயாரிக்க ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இருந்து கரும்புச் சர்க்கரை எனப்படும் நாட்டுச் சர்க்கரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.அதன்படி, ஜூலை 27ம் தேதி மதியம் 1 மணிக்கு நாட்டுச் சர்க்கரை கொள்முதல் செய்வதற்கான ஏலம் நடைபெறவுள்ளது. எனவே, நாட்டுச் சர்க்கரை உற்பத்தி செய்யும் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்துள்ள சர்க்கரையை அன்றைய தினம் முற்பகல் 11 மணிக்குள் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு கொண்டு வந்து விற்பனை செய்து பயனடையலாம்.மேலும், சர்க்கரை மூட்டைகளை சணல் நாரால் தைத்து, கல், மண், ஈரம் இல்லாமல் சுத்தமாகவும், கட்டி பிடிக்காத சர்க்கரையாகவும் கொண்டு வரவேண்டும். மேலும், விவரங்களுக்கு 99445 23556 எண்ணில் தொடர்பு கொள்ளலாம். என கவுந்தப்பாடி ஒழுங்கு முறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.