வேலூர், அக். 26: காட்பாடியில் பள்ளி மாணவிக்கு காதல் டார்ச்சர் கொடுத்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். காட்பாடி அக்ரவாரம் பகுதியைச் சேர்ந்தவர் திலீப்குமார்(26), வெல்டிங் வேலை செய்கிறார். இவர், காட்பாடி அருகே ஒரு பகுதியை சேர்ந்த 17 வயது பிளஸ்2 மாணவியிடம் அடிக்கடி சென்று தன்னை காதலிக்கமாறு டார்ச்சர் செய்து வந்துள்ளார். ஆனால் அந்த மனைவி காதலிக்க மறுத்துவிட்டராம். இதனால் ஆத்திரம் அடைந்த திலீப்குமார் அவரது வீட்டிற்கு சென்று காதலிக்குமாறு கட்டாயப்படுத்தி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், இதுகுறித்து காட்பாடி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து திலீப்குமாரை நேற்று கைது செய்தனர்.
+
Advertisement


