Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பறிமுதல் செய்த வாகனங்கள் ஏலம்: திருவள்ளூர் ஏடிஎஸ்பி தகவல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் மதுவிலக்கு அமல் பிரிவு மற்றும் காவல் நிலையங்களில் மதுவிலக்கு வழக்குகளில் சம்மந்தப்பட்ட 165 இரு சக்கர வாகானங்கள் மற்றும் 17 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 182 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  இந்நிலையில் மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் உத்தரவின்பேரில் வருகிற ஜூலை மாதம் 9 மற்றும் 10 ம் தேதிகளில் காலை 10 மணியளவில் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தின் அருகே 182 வாகணங்கள் ஏலம் விடப்பட உள்ளது.

வாகனங்கள் ஏலம் கேட்க வருபவர்கள் முன் வைப்புத் தொகையாக இரு சக்கர வாகனங்களுக்கு ஆயிரம் ரூபாயும், மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கரவாகனங்களுக்கு ரூ.5 ஆயிரமும் செலுத்தவேண்டும். அதற்கான டோக்கன்களை ஏலத்தேதி அன்று காலை 8 மணிமுதல் 10 மணி வரை வழங்கப்படும். வாகனத்தை ஏலம் எடுத்தவர்கள் ஏலம் கேட்ட தொகையுடன் இரு சக்கர வாகனங்களுக்கு அரசு விற்பனை வரி 12 சதவீதமும், மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 18 சதவீதமும் உடனடியாக செலுத்திட வேண்டும்.

வாகனத்தின் விபரம் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச மதிப்பீட்டு தொகை திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக தகவல் அறிவிப்பு பலகையில் ஒட்டிவைக்கப்பட்டுள்ளது. மேலும் வாகனத்தின் உரிமையாளர்கள், உரிமையாளருக்கான பதிவுச்சான்று மற்றும் ஆதார் கார்டும், ஏலத்தில் கலந்து கொள்ளவருபவர்கள் ஆதார் கார்டு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டை தவறாமல் கொண்டு வேண்டும். ஏலத்தில் கலந்து கொண்டு வாகனம் ஏலம் எடுக்காதவர்களுக்கு முன் வைப்பு கட்டணத் தொகை எலத்தின் முடிவில் திருப்பித் தரப்படும். இவ்வாறு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோ.அரிகுமார் தெரிவித்துள்ளார்.