பள்ளிபாளையம், செப்.20: ஆலங்காட்டுவலசு கால்வாய் கரையில், பனை விதைகள் நடும் பணியினை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தொடங்கி வைத்தார். நாமக்கல் மாவட்டத்தில் ஒரு கோடி பனை விதைகள் விதைக்கும் திட்டத்தின் கீழ், குமாரபாளையம் ஆலங்காட்டுவலசு கால்வாய் கரையில் பனை விதை விதைக்கும் பணி நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி பங்கேற்று, பனைவிதை நடும் பணியை தொடங்கி வைத்தார். இதையடுத்து பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கால்வாய் கரையில் 100க்கும் மேற்பட்ட பனை விதைகளை நட்டனர். இந்நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர்கள் குணசேகரன், காமாட்சி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் சரவணன், அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் குள்ளநாயக்கன்பாளையம் ராஜா, கண்ணன், நாராயாணாநகர் பாரதி, பள்ளி துணை ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
+
Advertisement