திருப்பூர், மார்ச்11: திருப்பூர், 15.வேலம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குரு (38).பனியன் தொழிலாளி. இவர் நேற்று முன் தினம் மது அருந்திவிட்டு நடந்து வந்துள்ளார். அப்போது 25 முக்கு, ரெயின்போ பேக்கரி அருகில் மதுபோதையில் இருந்த செல்வராஜுக்கும், குருவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செல்வராஜ்,குருவின் தலையில் கல்லை போட்டு காயம் ஏற்படுத்தினார். இதில் பலத்த காயமடைந்த குருவை அப்பகுதியினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து 15.வேலம்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து செல்வராஜை (36) கைது செய்தனர்.
+
Advertisement