காரைக்கால்,செப்.11: பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் ரேணுகாதேவி அம்மன் ஆலயத்தில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நடைபெற்ற பால் காவடி மற்றும் அலகு காவடியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். காரைக்கால் அடுத்துள்ள பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் ரேணுகாதேவி அம்மன் ஆலயத்தில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு பால் காவடி மற்றும் அலகு காவடி நடைபெற்றது. இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடைபெற்றுவது வழக்கம்.
அதை போல் நேற்று ரேணுகாதேவி அம்மன் ஆலயத்தில் அம்மனுக்கு பால் காவடி மற்றும் அலகு காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆண்கள் மற்றும் பெண்கள் என 500க்கும மேற்கொண்டார் பால் காவடி மற்றும் அலகு காவடி எடுத்து வந்து ரோணுகாதேவி அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர். இவ்விழாவில் மீனவ பஞ்சாயத்தார்,பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு ரோணுகாதேவி அம்மனை வணங்கி தரிசனம் செய்தனர். மேலும் சிலர் வயிற்றில் மாவு விளக்கி இட்டு அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தினர்.