தேன்கனிக்கோட்டை, நவ.12: தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பெண்ணங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் முஜாகித்(24). மாட்டிறைச்சி கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு, வீட்டின் முன்பாக பசு மாட்டை கட்டியிருந்தார். நள்ளிரவு வீட்டின் முன்பு கட்டியிருந்த மாடு கத்தியது. சத்தம் கேட்டு முஜாகித் எழுந்து வந்து பார்த்தபோது, அவரது மாட்டை ஒருவர் திருடிச்செல்ல முயன்றார். முஜாகித் சத்தம் போட்டதால் அக்கம் பக்கத்தனர் திரண்டு, தப்ப முயன்ற வாலிபரை மடக்கிப்பிடித்தனர். அவரை தேன்கனிக்கோட்டை போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் ஜவளகிரி அருகே உள்ள சொல்லேபுரத்தை சேர்ந்த டெம்போ வாகன டிரைவர் முரளி (27) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement