Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பசும்பலூர் திரவுபதி அம்மன் ஆலய தீமிதி திருவிழா

பெரம்பலூர், ஜூன் 10: பசும்பலூர் கிராமத்தில் திரௌபதி அம்மன் ஆலய தீ மிதித் திருவிழா கொண்டாடப்பட்டது. 100க்கும் மேற்பட்டோர் நேர்த்திக் கடன்களை நிறைவேற்ற தீ மிதித்தனர். பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுக்கா, பசும்பலூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள திரௌபதி அம்மன் ஆலய சித்திரைத் தீ மிதி திருவிழா நேற்று கொண்டாடப் பட்டது. இதனையொட்டி கடந்த மே மாதம்14ம் தேதி காப்புக் கட்டுதல் நடை பெற்றது.

இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மகாபாரத நிகழ்வுகளை தத்ரூபமாக நடத்திக் காட்டும் விதமாக சந்தனு பிறப்பு, வேத வியாசர் பிறப்பு, அம்பை, அம்பிகா, அம்பாலிகை பிறப்பு, சித்ராங்கதன், விசித்திர வீரியன் பிறப்பு, திருதராஷ் டிரன், பாண்டு, விதுரன் பிறப்பு, கர்ணன் பிறப்பு, தர்மர் பிறப்பு, கிருஷ்ணன் பிறப்பு, கிருஷ்ணன் திருவிளையாடல், துரோணாச் சாரி யார் வில்வித்தை அரங்கேற்றம், திரௌபதி அம்மன் பிறப்பு, தர்மர் இளவரசு பட்டாபிஷேகம், அரக்குமாளிகை தகனம், கன்னியா வனவாசம், அர்ஜுனன் வில் வளைத் தல்,

திரௌபதி அம்மன் திருக்கல்யாணம் மற்றும் சாமி புறப்பாடு, இந்திர பிரஸ்தம், அர்ஜுனன் தீர்த்த யாத்திரை மற்றும் அள்ளி, சுபத்திரை திரு மணம், ராஜ சூய யாகம், சூது மற்றும் துகில் அளித் தல், குறவஞ்சி நாடகம், திணை காத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று காலையில் அரவானகளப் பலியும், மாடு திருப்புதலும் நடத்தப் பட்டு, மாலை 3 மணிக்கு மேல் தீமிதி விழா நடைபெற்றது. இதனையொட்டி ஊரின் முக்கிய பகுதியிலிருந்து பக்தர்கள் 100க்கும் மேற்பட்டோர் கோவில் அருகே அமைக்கப்பட்டிருந்த தீக்குழிக்குள் இறங்கி தீமிதித்தனர்.

விழாவில் பசும்பலூர் மட்டுமன்றி அருகில் உள்ள பிம்பலூர், கை.களத்தூர், வி.களத்தூர், நெய்குப்பை, மரவநத்தம், சாத்தனவாடி, மேட்டுப்பாளையம், பிரம் மதேசம், அனுக்கூர், பாண் டகப்பாடி, பெரிய வடகரை, மங்களமேடு, பெரம்பலூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருவிழா சிறப்பு பூஜைகளை திருவாளந்துறை தோளீஸ்வரர் சுவாமி திருக்கோவில் அர்ச்சகர் பாலசுப்பிரமணியன் சிவாச்சாரியார் நடத்தி வைத்தார். 11ம் தேதி மஞ்சள் நீராட்டு, பட்டாபிஷேகம் மற்றும் 16, 17 தேதிகளில் நாடகத்துடன் திருவிழா நிறைவடைகிறது.