நெல்லை: திமுக தலைமை வழிகாட்டுதலின்படி நெல்லை கிழக்கு மாவட்ட திமுக ஒன்றிய,நகர, பேரூர் மாணவர் அணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பார்கள் நியமனம் செய்வதற்கான நேர்காணல் வருகிற 20ம் தேதி காலை 10 மணிக்கு ஹோட்டல் அப்னாபார்க்கில் வைத்து நடக்கிறது.
இந்த நேர்காணல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நெல்லை கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தலைமையில் நடந்தது. மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அலெக்ஸ் அப்பாவு வரவேற்றார். மாவட்ட துணை அமைப்பாளர்கள் சீனிதாஸ், லெட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை அமைப்பாளர் ராஜதுரை நன்றி கூறினார்.


