தக்கலை.ஜூன் 7: நிலம் விற்பதாக கூறி தலைமை ஆசிரியரிடம் ரூ.33 லட்சம் மோசடி செய்ததாக கணவன் மனைவி கைது செய்யப்பட்டனர். தக்கலை அருகே உள்ள காட்டாத்துறை குருவிளைகாடு பகுதியைச் சேர்ந்தவர் அருள் சகாய சேகர் (56). இவர் அரசு நடுநிலைப்பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக உள்ளார். இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் ததேயூஸ் (54). இவர் தனக்கு சொந்தமான ஐந்து சென்ட் நிலத்தை அருள் சகாய சேகரின் மகனுக்கு விற்பதாக கூறி அருள் சகாய சேகரிடம் இருந்து இரு தவணைகளாக ரூ.33 லட்சம் பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த நிலத்தை அவர்களது பெயருக்கு எழுதி கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். இது குறித்து அருள் சகாய சேகர் அளித்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் ததேயூஸ் மற்றும் அவரது மனைவி ஜெயினி மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
+
Advertisement


