நித்திரவிளை, ஜூன் 1 ; நித்திரவிளை அருகே தூத்தூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு வீசிய சூறை காற்று காரணமாக அந்த பகுதியில் நின்ற தென்னை மரம் ஒன்று ஸ்பைடன் என்பவரின் வீட்டின் மேல் பகுதியில் அடியோடு சாய்ந்து விழுந்தது. இது குறித்து தகவலறிந்த தமிழ்நாடு பேரிடர் மீட்புக் குழுவின் குமரி மாவட்ட தலைவர் இன்ஸ்பெக்டர் விக்னேஷ் உத்தரவின் பேரில், கிள்ளியூர் தொகுதி பேரிடர் மீட்புக் குழு ஏட்டு சந்திரசேகர் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் சம்பவ இடம் சென்று தென்னை மரத்தை வெட்டி அகற்றினர்.
+
Advertisement


