Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

நாளை முதல் லோக் அதாலத் ஆக.3ம் தேதி வரை நடக்கிறது

சிவகங்கை, ஜூன் 28: சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் முதன்மை மாவட்ட நீதிபதி சொர்ணம் நடராஜன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: உச்சநீதிமன்றம் நாளை (ஜூன் 29) முதல் 03.08.2024 வரை சிறப்பு மக்கள் நீதிமன்றம் மூலம் உச்சநீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்குகளுக்கு சமரச முறையில் தீர்வுகாண ஏற்பாடு செய்துள்ளது. இதில் வழக்குறைஞர்கள் மற்றும் வழக்காடிகள் இருதரப்பினரும் கலந்து கொண்டு தங்களது வழக்குகளை நேரிலோ அல்லது ஆன்லைன் மூலமோ சமரசமாக முடித்து தீர்வு காணலாம்.

இதில் குறைந்த செலவில் வழக்குகளுக்கான தீர்வு, நீதிமன்ற முத்திரை கட்டணம் திரும்ப பெறுதல், விரைவான தீர்வு ஆகியன சிறப்பம்சமாகும். வழக்கு விபரங்களை அருகிலுள்ள நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் சட்ட உதவி மையம் அல்லது சிவகங்கை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் நேரிலோ அல்லது 04575 242561 என்ற தொலை பேசி எண் மற்றும் dlsasivagangai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி, மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு தொலை பேசி எண் 044 25342441 மற்றும் tnslsaspllokadalat@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் தெரிவிக்கலாம். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொண்டு வழக்குகளுக்கு தீர்வு பெறலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.